Monday, September 22, 2008

மொழி பெயர்ப்பு

Sep 13

எனக்குப் புரிகிறது -
அந்தக் கருவிழிகளின் அசைவிலும்,
புருவங்களின் நெரிப்பிலும்,
இதழ்களின் விரிப்பிலும்
உள்ள தயக்கங்களின் மொழிகள்!

இனி நான் உனக்கான
கனாக்களை காண்பதில்லை.
என் பேனாவை எறிந்துவிட்டேன் -
உனக்கான கவிதைகளை வேறு யாரோ
எழுதிக் கொண்டிருக்கின்றார்கள்.

இன்னொரு முறை
சந்திக்க நேரிடும் போதும் பேசிவிடாதே -
காதல் என்பது காதலிப்பதில்
மட்டும் இல்லை!
இப்படியே இருந்துவிட்டுப் போகட்டும் -
இதுவும் பரவசமாய்த் தான் இருக்கிறது!

வெற்றிக்கு ஏழு குறள்கள்.............

எல்லா சுயமுன்னேற்ற நூல்களையும் சேர்த்து சாராம்சத்தை சுருக்கமாக அறிய முற்படுகிறீர்களா? உங்களுக்கு திருக்குறள் தான் ஒரே புகலிடம். கடுகைத் துளைதேழ் கடலைப் புகுத்தி குறுகத் தரித்த குறள் என்ற வர்ணனை திருக்குறளைப் பொருத்த வரை சிறிதும் மிகையல்ல.

எந்த சூழ்நிலையானாலும் சரி அதைச் சமாளிக்க என்ன அறிவுரை வேண்டுமானாலும் ஒருவன் திருக்குறளில் இருந்து பெற்றுத் தெளிவடைய முடியும். ஆன்மீகம் ஆகட்டும், லௌகீகம் ஆகட்டும், அறம் ஆகட்டும், தொழில் ஆகட்டும், அமைதி ஆகட்டும், மகிழ்ச்சி ஆகட்டும் குழப்பாமல் வழி காட்டும் அறிவுப் பொக்கிஷம் திருக்குறள் தான்.

நீங்கள் வெற்றியடைய விரும்புகிறீர்களா? உங்களுக்குப் பல நூல்கள் படிக்க நேரமும் பொறுமையும் இல்லையா? உங்களுக்கு திருக்குறள் உதவும். அதிலும் நீங்கள் எல்லாக் குறள்களையும் படிக்க வேண்டியதில்லை. ஏழே ஏழு குறள்களை நினைவில் நிறுத்தி பின்பற்றுங்கள் போதும்.


1) எண்ணத்தில் உறுதி:

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியராகப் பெறின். (666)

நினைத்ததை நினைத்தபடி அடைபவர் யார் தெரியுமா? தங்கள் எண்ணத்தில் உறுதியாக இருப்பவர்கள் தான். எண்ணத்தில் உறுதி இல்லா விட்டால் அது செயலில் முடியாது. செயலில் முடியாத எண்ணங்கள் விதைக்காத விதைகள். மாறாத உறுதியான எண்ணம் தான் எல்லா வெற்றிக்கும் ஆரம்ப விதி

2) Think positive

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினினும் தள்ளாமை நீர்த்து. (596)

எண்ணுவதெல்லாம் உயர்வானதாகவே இருக்க வேண்டும். பாதகமான சூழ்நிலைகளிலும் உயர்வான எண்ணங்களை எண்ணுவதை விட்டு விடக் கூடாது. எண்ணமே வாழ்க்கை என்பது அனுபவ உண்மை. சாதகமான சூழ்நிலைகளில் பாசிடிவ் ஆகவும், உயர்வான எண்ணங்களையும் நினைப்பது பெரிய விஷயமல்ல. பாதகமான சூழ்நிலைகளிலும் அதே எண்ணங்களோடு இருப்பவன் தான் வெற்றியை தனதாக்கிக் கொள்கிறான்.

3) விடாமுயற்சி

ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்கு செல்லாதது இல். (472)

தனக்குப் பொருந்தும் செயலையும் அதற்கு அறிய வேண்டியதையும் அறிந்து அதனிடம் நிலைத்து முயல்கின்றவர்க்கு முடியாதது எதுவும் கிடையாது. வெற்றிக்கு ஆயிரம் வழிகள் இருக்கலாம். நம் இயல்புக்குப் பொருந்துகிற வழியைத் தேர்ந்தெடுத்து அதற்கு அறிய வேண்டிய அனைத்தையும் அறிந்து அந்த வழியில் விடா முயற்சியுடன் முயன்றால் வெற்றி நிச்சயம்.

4) இந்த ஐந்தில் கவனம் தேவை

பொருள்கருவி காலம் வினையிடனோடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல். (675)

வேண்டிய பொருள், ஏற்ற கருவி, தக்க காலம், மேற்கொண்ட செயலின் தன்மை, உரிய இடம் ஆகிய ஐந்தினையும் குழப்பம் இல்லாமல் சிந்தித்து செயல் புரிய வேண்டும். இந்த ஐந்தில் ஒன்றில் குழப்பம் இருந்தால் கூட அது வெற்றி வாய்ப்பை பாதிக்கும்.

5) இந்த நான்கைத் தவிருங்கள்

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன். (605)

காலம் நீட்டித்தல், மறதி, சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம் இந்த நான்கும் கெடுகின்ற இயல்புடையவர்கள் விரும்பி ஏறும் மரக்கலம் என்கிறார் திருவள்ளுவர். வெற்றியடைய வேண்டுபவர்கள் தோல்விக்கான வாகனத்தில் பயணம் செய்யலாமோ?

6) இவை இரண்டும் வழுக்குப்பாறைகள்

நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது. (854)

ஒருவன் சினம் நீங்காதவனாய், நெஞ்சத்தை நிறுத்தியாளும் தன்மை இல்லாதவனாய் இருந்தால் அவன் எந்தக் காலத்திலும், எந்த இடத்திலும், யாருக்கும் எளியவன். வெற்றியின் உயரத்திற்குச் செல்பவர்கள் இந்த இரண்டு வழுக்குப் பாறைகளில் கவனமாக இருப்பது நல்லது. இல்லா விட்டால் இது வரை சாதித்தது எல்லாம் வீணாய்ப் போகும்.

7) இந்தப் பேருண்மையை மறக்காதீர்கள்

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை (659)

பிறர் வருந்துமாறு செய்து பெற்றதெல்லாம் பெற்றவன் வருந்துமாறு செய்து போய் விடும். நல்வழியில் வந்தவை தற்காலிகமாக இழக்கப்பட்டாலும் பின்னர் பயன் தரும். இந்த பிரபஞ்ச உண்மையை என்றுமே மறந்து விடாதீர்கள். வெற்றி என்பது எந்த வழியில் வருகிறது என்பது மிக முக்கியம். நேர்மையற்ற வழியில் மற்றவர் வயிறெரிந்து வருவதெல்லாம் நம்மை நிம்மதியாக இருக்க என்றுமே விடாது.

இந்த ஏழு குறள்களில் முதல் நான்கு வெற்றிக்கு வழி சொல்கின்றன. அடுத்த இரண்டும் தோல்வி தரக் கூடியவற்றில் எச்சரிக்கையாக இருக்கச் சொல்கின்றன. கடைசி குறள் வெற்றியின் நிறைவு நமக்கு என்றென்றைக்கும் நிலைக்க வேண்டுமானால் அது நியாயமாக இருக்க வேண்டும் என்று சொல்கிறது

பின்பற்றி வெற்றி பெற வாழ்த்துக்கள்.


(Source:- http://www.enganeshan.blogspot.com/)

பொய்யைக் கண்டறிய சில வழிகள்

தமிழ் ஓசை - களஞ்சியம் இதழில் வெளியான கட்டுரை)

பொய் பேசுபவர்களோடு பழகவும், இணைந்து பணியாற்றவும், வாழவும் வேண்டிய சூழல் எல்லோருக்குமே நேரிடுகிறது.

பொய் பேசுபவர்களிடம் அகப்பட்டு பணத்தையும், பொருளையும், நிம்மதியையும் இழந்து திரியும் மக்களைக் குறித்த செய்திகள் நாளேடுகளில் தினமும் இடம் பெறுகின்றன.

பொய் மெய்யுடன் கலந்து மெய்யும் பொய்யும் செம்புலப் பெயல் நீர் போல இன்று மனித பேரணியில் பயணித்துக் கொண்டிருக்கிறது.

பேசுவது பொய் என்பதைக் கண்டுபிடிக்க முடிந்தால் எப்படி இருக்கும் ? அதொன்றும் பெரிய வித்தையில்லை என்கிறார் பல ஆண்டுகாலம் அமெரிக்க காவல் துறையில் பணியாற்றிய நியூபெர்ரி என்பவர்.

ஒருவர் பேசுவது பொய்யா இல்லையா என்பதைக் கண்டு பிடிக்க அவர் சில வழி முறைகளைச் சொல்கிறார்.

1. முதலில் பேசுபவர்களின் வார்த்தைகளைக் கவனியுங்கள். அதில் இருக்கும் தொடர்பற்ற, அல்லது இயற்கைக்கு முரணான செய்திகளை கவனமாய் கண்டறியுங்கள்.

முக்கியமாக மனித இயல்புகளுக்கு மீறிய வார்த்தைகளையும், நடக்க சாத்தியமற்ற கூறுகளையும் கண்டுணருங்கள்

2. உலகில் நான்கு விழுக்காடு பொய்யர்கள் மிகத் திறமை சாலிகள், மற்றவர்களைக் கண்டறிவது மிக மிகக் கடினம். மற்றவர்கள் எளிதில் மாட்டுவார்கள். பொய்யர்கள் என கருதும் நபர்களிடம், அவர்கள் எதிர்பார்க்காத ஒரு கேள்வியை எதிர்பார்க்காத நேரத்தில் கேளுங்கள். அவர்கள் பொய்யர்கள் என்றால் அந்த கேள்வியே அதைக் காட்டிக் கொடுத்து விடும்.

3. தெரிந்த நபர் எனில் அவருடைய இயல்புகளை வைத்து, அதில் தெரியும் மாற்றங்களை வைத்து அவரை கணக்கிடுங்கள். அமைதியான நபர் கலகலப்பாக இருப்பது போல் காட்டிக் கொள்வதும், கலகலப்பான நபர் சற்று அமைதியாய் இருப்பதும் நிகழ்ந்தால், ஏதோ செய்தி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

.
4. வெளிப்படுத்தும் உணர்வுகளை வைத்து எளிதில் இனம் கண்டு கொள்ளுங்கள். புன்னகையில் செயற்கை வாசமடிக்கிறதா ? நகைச்சுவை சொன்னால் உடனே சிரிக்காமல் இருக்கிறார்களா, நமது உரையாடலில் தேவையான உணர்ச்சிகள் வெளிப்படாமல் இருக்கிறதா ? இவையெல்லாம் பொய்யின் குழந்தைகள்.

.
5. திடீர் உணர்ச்சிகளை கவனியுங்கள். பெரும்பாலானவர்கள் எதையேனும் மறைக்க முயன்றால் கண நேரத்தில் அவர்களுடைய கண்களில் குற்றம் தோன்றி மறையும். பெரும்பாலும் காவல் துறையில் இருக்கும் திறமையான நபர்களால் மட்டுமே அதைக் கண்டு பிடிக்க முடியும் எனினும் கவனத்தில் கொள்வது நல்லது.

.
6. “நான் நினைக்கிறேன்”, “நான் நம்புகிறேன்” போன்ற உரையாடல்கள் பல வேளைகளில் பொய்யைச் சொல்ல பயன்படுத்தப்படும் வாக்கியங்கள். எனவே சூழலுக்கு ஏற்றபடி இந்த வார்த்தைகள் சொல்லும் பொருள் என்னவாய் இருக்கும் என கணித்துக் கொள்ளுங்கள்.

7. முன்னுக்குப் பின் முரணான கருத்துக்கள் என்னென்ன என்பதை கவனியுங்கள். சிலர் இல்லை என்று சொல்லும் போது அவர்களுடைய உடலசைவு “ஆம்” என்று சொல்லும். சிலர் ஒரே செய்தியை வேறு விதமாய் கேட்கும் போது வேறு விதமாய் பதிலளிப்பார்கள். அதை கவனியுங்கள்.

.
8. இயல்பாக இல்லாமல் இருக்கிறாரா என்பதை கவனியுங்கள். ஏதேனும் தவறு செய்துவிட்டவன் இயல்பாய் இருப்பதாய் காட்டிக் கொண்டாலும் இயல்பாய் இருப்பதில்லை.

.
9. பொய் சொல்பவர்கள் அல்லது உண்மையை மறைப்பவர்கள் தேவையற்ற நீண்ட விளக்கங்கள் கொடுப்பார்கள். ஆம், இல்லை என்னும் சிறு பதிலை எதிர்பார்க்கும் கேள்விக்குக் கூட அவர்கள் நினைத்திருக்கும் நீண்ட பதிலை சொல்கிறார்களா என கவனியுங்கள்.
பொய்யைக் கண்டறிய இது மிகவும் பயனளிக்கும்.

.
10. பேசும்போதெல்லாம் பொய்யே பேசுவார்கள் என்னும் எண்ணத்தோடு அணுகுதலும் தவறு. பொய் பேசுகிறார்கள் எனில் பேசுவது எல்லாமே பொய் என முடிவு செய்தலும் தவறு. ஒரு பொய் சொல்லப்பட்டால், அதை கண்டுணர்ந்தால், அதன் காரணத்தை அறிய முயலுங்கள்.
மேற்கூறிய செய்திகளெல்லாம் பொய்களைக் கண்டறியும், நிரூபிக்கப்பட்ட உண்மைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், குடும்ப உறவுகள் சார்ந்த சிக்கல்களில் சந்தேகக் கண்களை கழற்றி வைத்து விட்டு நம்பிக்கை கரம் கொண்டு அரவணைத்து நடப்பதே ஆரோக்கியமானது.

(Source:- http://xavi.wordpress.com/)

காலத்தைக் வென்று நிற்கும் பொன்மொழிகள் !

சுவாமி விவேகானந்தர்:

உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய்.

வில்லியம் ஷேக்ஸ்பியர்:

வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள்

1. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
2. பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
3. பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.


அடால்ஃப் ஹிட்லர்:

நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது.

ஆலன் ஸ்டிரைக்:

இந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம். அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வதாகப் பொருள்.

அன்னை தெரசா:

இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த இயலும்.

நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது.

பான்னி ப்ளேயர்:

வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் முதல் இடத்தைப் பெறுவது என்று பொருள் அன்று. வெற்றி பெற்றாய் என்றால் உன் செயல்பாடு சென்ற முறையை விட இம்முறை சிறப்பாக அமைந்துள்ளது என்று பொருள்.

லியோ டால்ஸ்டாய்:

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

அப்ரஹாம் லிங்கன்:

கண்ணெதிரே காணும் ஒவ்வொருவரையும் நம்புவது அபாயகரமானது. அதைக் காட்டிலும் ஒருவரையும் நம்பாதிருப்பது மிகவும் அபாயகரமானது.

ஐன்ஸ்டைன்:

எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள்.

சார்லஸ்:

ஒரு பொழுதும் வாழ்க்கையில் நம்பிக்கை, வாக்கு, சுற்றம், இதயம் இந்த நான்கையும் முறித்துக் கொள்ள முயலாதீர்கள். ஏனெனில் அவைகளனைத்தும் உடையும் பொழுது ஒலி எழுப்பாது போனாலும் பெரும் வலியை ஏற்படுத்தும்.

JOKE

மின்னல் சிரிப்பு

“மின்னல் அடிக்கும்போதெல்லாம் சர்தார்ஜிகள் சிரிப்பது ஏன்?”

“தங்களை யாரோ போட்டோ எடுப்பதாக அவர்கள் நினைப்பதுதான்”

###############################################

கண்ணாடிக் கடையில் சர்தார்ஜி


சர்தார்ஜி: ஒரு கண்ணாடி குடுங்க...

கடைக்காரர்: இந்த கண்ணாடியை வாங்குங்க சார். இதுல என்ன விசேஷம்னா, 100 அடி உயரத்தில இருந்து போட்டாலும், முதல் 99 அடி வரைக்கும் இந்த கண்ணாடி உடையவே உடையாது..

சர்தார்ஜி: சூப்பர். முதல்ல அதுக்கு பில் போடுங்க

#################################################

சர்தார்ஜியின் மகன்:- கடவுளே, எப்படியாவது நியூயார்க்கை பஞ்சாபின் தலைநகரமா மாத்திரு...

அப்பா சர்தார்ஜி:- ஏண்டா அப்படி வேண்டுறே?

சர்தார்ஜியின் மகன்:- ஏன்னா நான் அப்படித்தான் பரிட்சையில எழுதியிருக்கேன்.

#################################################

சர்தார்ஜியின் லீவ் லெட்டர்


‘என் மனைவிக்கு உடல் நலம் சரியில்லை. அவளைப் பார்த்துக் கொள்ள கணவர்கள் என்று வேறு யாரும் இல்லாததால் எனக்கு விடுப்பு வேண்டும்’

###################################################

நீதிமன்றத்தில் டாக்டர்

வக்கீல்: டாக்டர்! விநாயகத்துக்கு நீங்கள் பிரேதப் பரிசோதனை செய்த நேரத்தை கொஞ்சம் ஞாபகப்படுத்திக் கூற முடியுமா?

டாக்டர்: 8:30 மணி இருக்கும்

வக்கீல்: விநாயகம் அப்ப இறந்திருந்தார் அல்லவா?

டாக்டர் (கிண்டலாக): இல்லை, பக்கத்து டேபிளில் உட்கார்ந்துக்கிட்டு நான் பிரேதப் பரிசோதனை செய்றதைப் பார்த்துக்கிட்டு இருந்தார்.

#########################################################

ஏடிஎம்-ல் சர்தார்ஜி


சர்தார்ஜி ஒருவர் ஏடிஎம்-ல் பணம் எடுத்துக் கொண்டிருந்தார். வரிசையில் பின்னால் நின்று கொண்டிருந்தவர் சர்தார்ஜியிடம்

“நான் உங்களது பாஸ்வேர்டைப் பார்த்துவிட்டேன். அது ****.” என்றார்.

சர்தார்ஜி உடனே

“ஐயோ அது தப்பு. 1375 தான் எனது பாஸ்வேர்ட்” என்றாரே பார்க்கலாம்.

இளமைக் கவலை.


வணக்க முறையாக
மூக்கோடு
மூக்கு உரசுபவர்கள்,

முத்தமிட்டுப்
புன்னகைப்பவர்கள்,

கட்டியணைத்து
தட்டிக் கொடுப்பவர்கள்,

இப்படியான
ஒரு தேசத்தில் இல்லாமல்
போனதைக் குறித்து
கவலைப்படுகிறேன்.
நீ எதிரே வருகையில்.

நாசமாய் போன தமிழகம்

பொதுவாகவே நம்முடைய பெரியவர்கள் தொட்டதுக்கெல்லாம் "நாடு இப்போ ரொம்ப கெட்டுப் போச்சு ..எங்க காலத்துல..." என்று ஆரம்பித்து விடுவார்கள் .தமிழக அரசியல் என்று வரும் போது இன்னும் நிறைய பேர் அவர்களோடு சேர்ந்து கொள்வார்கள் ..திராவிட இயக்க ஆட்சி வந்த பிறகு தான் நாசமாய் போனதாக்கும் .இல்லையென்றால் தமிழ்நாடு இப்படி நாசமாய் போயிருக்காதாக்கும் என்றெல்லாம் சாபமும் ஒப்பாரியுமாக இருக்கும் .கேட்பவர்களுக்கு கூட இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் இப்படி கெட்டு குட்டிச்சுவராயிடுச்சு போல என்றொரு எண்ணம் தோன்றும்.

அப்புறம் ஒப்பீட்டுக்கு காமராஜர் ,கக்கன் இந்த இரண்டு பேரையும் சொல்வார்கள் ..மறந்தும் ராசாசி ,பக்தவச்சலம் பற்றி சொல்ல மாட்டார்கள் .ராசாசி ,பக்தவத்சலம் போன்ற உயர் அடுக்கிலிருந்து வந்தவர்களே கோலோச்சிய அதிகாரத்தில் காமராஜரும் கக்கனும் வந்ததே பெரிய மாற்றம் தான் .அதனால் தான் தந்தை பெரியார் காமராசரை ஆதரித்தார்கள் .கல்விக்கண் திறந்த தலைவனை என்றும் மறவோம் ,அது வேறு.காமராசராலும் கக்கனாலும் காங்கிரசுக்கு பெருமையே தவிர ,காங்கிரசால் அவர்களுக்கல்ல ..இன்று காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று முழங்குபவர்களில் முக்கால்வாசி பேரின் பின்னணி காமராஜருக்கு துரோகம் செய்து விட்டு இந்திரா பின்னால் போனது தான் .

திராவிட இயக்க ஆட்சிக்கு வக்காலத்து வாங்கவில்லை .ஆனால் தேசிய கட்சிகள் ஆண்டிருந்தால் தமிழகம் நாசமாயிருக்காது என்று சொல்பவர்களுக்கு நான் கேட்கும் கேள்வி "ஒட்டு மொத்த இந்தியாவை ஒப்பிடும் போது அப்படி தமிழகம் என்னைய்யா நாசமாய் போய்விட்டது?" .ஏதோ இந்தியாவில் தேசிய கட்சிகள் ஆளும் மாநிலங்கள் பாலும் தேனும் ஓடுவது போலவும் , நிர்வாக சீர்கேடுகளே இல்லாதது போலவும் .

அப்புறம் இந்தியை கட்டாயமாக படிக்க விடாமல் தமிழ்நாட்டை கெடுத்து விட்டார்கள் .இது ஒரு குற்றச்சாட்டு .தேவையானவர்கள் படித்துக்கொள்ள வேண்டியது தானே ? சரி ..இப்போ இந்தி பேசுகிற மாநிலங்களின் லட்சணங்களை பார்க்கலாமே .நாலஞ்சு சல்மான் கான் ,சாருக்கான் படங்களை பார்த்து விட்டு வட இந்தியாவில் செல்வம் கொழிக்கிறதாக்கும் ,எல்லோரும் பெரிய பெரிய பங்களாவில் கூத்தும் கும்மாளமுமாக தான் இருப்பார்களாக்கும் ..சே .நாமளும் இந்த தமிழ் நாட்டில் வந்து பிறந்தோமோ என நினைக்கும் இளைய தலைமுறைக்கு நகரம் தவிர்த்த வட இந்திய கிராமப்புறங்களின் லட்சணத்தையும் ,தமிழகத்தின் கிராமப்புறங்களையும் ஒப்பிட்டுப் பார்க்க சொல்லிக்கொடுக்க வேண்டாமா?

சரி..விஷயத்துக்கு வருவோம்..இந்தியா டுடே பத்திரிகை சமீபத்தில் நாடு தழுவிய மக்களவைத் தொகுதிகள் மற்றும் மாநிலங்களின் தரப்பட்டியலை வெளியிட்டுள்ள்து .543 மக்களவைத் தொகுதிகள் ,20 பெரிய மாநிலங்கள் ,10 சிறிய மாநிலங்கள் ,5 யூனியன் பிரதேசங்கள் என்று பிரித்து சமூக பொருளாதாரம் ,உட்கட்டமைப்பு ,விவசாயம் ,தொழில் ,கல்வி ,ஆரம்ப சுகாதாரம் உள்ளிட்ட பல தளங்களில் ஆய்வு செய்து சில புள்ளியல் விவரங்களை ,தரப்பட்டியலை வெளியிட்டுள்ளது .அதிலிருந்து சில சுவாரஸ்ய தகவல்களை பார்ப்போம் .

* நாட்டின் சிறந்த 100 மக்களவை தொகுதிகள் (மொத்தம் 543) பட்டியலில் தமிழகத்தின் 26 தொகுதிகள் இடம் பிடித்துள்ளன.

* கேரளாவின் அனைத்து 20 தொகுதிகளும் சிறந்த 100 பட்டியலில் இடம் பிடித்துள்ளன . காம்ரேட்கள் தான் காரணம் என நினைக்க வழியில்லை ..ஏனென்றால் மேற்கு வங்கம் அதல பாதாளத்தில் இருக்கிறது ..வெளிநாடு வாழ் மலையாளிகளின் அன்னிய செலவாணியும் ,சுற்றுலாவுமே கேரளத்துக்கு கைகொடுக்கின்றன.

* தமிழகமும் ,கேரளமும் மட்டும் 100-ல் 46 தொகுதிகளை கொண்டிருக்கின்றன .சிறந்த 100 தொகுதிகளில் 79 தொகுதிகள் விந்திய மலைக்கு தெற்கே இருக்கின்றன .

* மாநிலங்களின் ஒட்டு மொத்த தரவரிசையில் தமிழகம் 2-ம் இடத்தில் இருக்கிறது .முதலிடம் பஞ்சாப் .சென்ற வருடம் 4-வது இடத்திலிருந்து இந்த வருடம் 2-ம் இடத்திற்கு தமிழகம் முன்னேறியிருக்கிறது .

* விவசாயத்தில் பஞ்சாப் ,ஹரியானாவுக்கு அடுத்து தமிழகம் 3-வது இடத்தில் .

* ஆரம்ப சுகாதாரத்தில் தமிழகம் முதல் இடம் .முதலிடத்திலிருந்த கேரளாவை பின்னுக்கு தள்ளி தமிழகம் முதலிடத்தில்.

* முதலீட்டு சூழலில் இமாச்சல பிரதேசம் ,குஜராத் ,பஞ்சாப் -க்கு அடுத்து தமிழகம் 4-வது இடத்தில்.சென்ற வருடம் 7-வது இடம்.

* ஆரம்ப கல்வியில் தமிழகம் 4-வது இடம் .சென்ற வருடம் 6-வது இடம்.

* உள்கட்டமைப்பில் பஞ்சாப் ,இமாச்சல் ,கேரளா- வுக்கு அடுத்ததாக தமிழகம் 4-வது இடத்தில்.

* நுகர்வோர் சந்தையில் தமிழகம் 7-வது இடத்தில்.

* சட்டம் ஒழுங்கில் கேரளாவுக்கு அடுத்து தமிழகம் 2-வது இடத்தில்.

* இரு சக்கர வாகனங்கள் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம்.

* மிகவும் நகரமயமான மாநிலங்களில் பெரிய மாநிலங்களில் தமிழகம் முதலிடம் .

* மாநிலங்கள் தர வரிசையில் கடைசி இடங்களில் இருப்பவை பற்றி சொல்லத் தேவையில்லை . பீகார் ,ஜார்கண்ட் ,உத்திர பிரதேசம் .. இந்தி சொல்லித் தராமல் தான் பெரிய இந்தி மேதையாவதை தடுத்து விட்டதாக அங்கலாய்க்கு விஜயகாந்த் வீணாக தமிழகத்தில் கஷ்டப்படுவதற்கு இங்கே போய் குடியேறி விடலாம் .நமக்கும் நல்லது .

* நேரு குடும்பம் 8 முறை வென்ற ரேபரேலி தொகுதி 507-வது இடத்தில்.

* ராஜீவ் ,சஞ்சய் வென்ற அமேதி தொகுதி 484-வது இடத்தில் .

* ஷிபு சோரனின் தும்கா தொகுதி 540-வது இடத்தில்.

* சோம்நாத் சாட்டர்ஜியின் போல்பூர் தொகுதி 319 -வது இடத்தில்.

THANKS
http://cdjm.blogspot.com/

இணைய நூலகம்

இணைய நூலகம்


புத்தகங்கள் என்றைக்கும் மாறாத சொத்துகள். அவற்றை வீட்டில் வைத்துக் கொள்வதன்
மூலம் வீடு அறிவுசார்ந்த ஒன்றாக மாறும். ஆனால் தற்போது புத்தகங்களை வைத்துக்
கொள்வதற்கு ஏற்ற இடம் இருப்பதில்லை. அந்தப் புத்தகங்களைத் தேவையானபோது தேடி
எடுக்க முடிவதில்லை. பழைய புத்தகங்களாக இருந்தால் அவற்றின் தாட்கள் மக்கிப்போய்
உடைந்துவிடுகின்றன. இப்படிப் பல சிக்கல்கள் காரணமாக பலர் புத்தகங்களை வீட்டில்
வைத்துக் கொளவதே இல்லை.

சரி. வீட்டில்தான் வைத்துக் கொள்ள முடிவதில்லை. பொது நூலகங்களுக்குப்
போகலாம். அங்கு போக வேண்டுமானால் அதற்கு உரிய நேரத்தில் செல்ல வேண்டும்.
அங்கு உறுப்பினராக ஆக வேண்டும். அதன்பின் அங்கு தேவையான புத்தகங்கள் இருக்க
வேண்டும். அப்படி எல்லாம் இருந்துவிட்டால் அந்தப் புத்தகம் எந்த இடத்தில்
இருக்கிறது என்பதைத் தேட வேண்டும். இப்படித் தேடித் தேடி அலுத்துப்போய்
புத்தகம் படிக்கும் ஆசையே போய்விடலாம்.

வாடகை நூலகம் செல்கிறோம் என்றால் இவற்றிலும் சிக்கல்கள் இல்லாமல் இல்லை.
ஏனென்றால் புத்தகங்களுக்கு வாடகை செலுத்திப் புத்தகத்தைப் படிக்கவேண்டும்.
நல்ல புத்தகத்தை நமக்கே உரிமையாக்கிக் கொள்ள முடியாது.

சரி. நமக்குத் தேவையான நேரத்தில் புத்தகம் கிடைக்கவேண்டும். அந்த நூலகம்
வீட்டிலேயே இருக்கவேண்டும். உடனே அட்டவணையைப் பார்த்துப் புத்தகத்தை
எடுத்துவிடவேண்டும். வேறு யாராவது அந்தப் புத்தகத்தை எடுத்துச்
சென்றிருந்தாலும் அந்தப் புத்தகத்தின் மற்றொரு நகல் நமக்குக் கிடைக்கவேண்டும்.
தேவையான மிக முக்கியமான புத்தகத்தை நமக்கே உரிமையாக்கிக் கொள்ள வேண்டும். அந்த
நூலகம் வீட்டில் உள்ள இடத்தையும் அடைக்கக் கூடாது. இந்த அளவிற்கு வசதிகள்
கொண்ட நூலகம் எங்கே இருக்கிறது.

எங்கே இருக்கிறது என்ற கேள்விக்கு இங்கே இருக்கிறது எனப் பதில் சொல்கிறது
இணையம். இணையத்தில் நம் பார்வைக்குப் பல புத்தகங்கள் கிடைக்கின்றன. இவற்றை
எப்பொழுது வேண்டுமானாலும் திறந்து படிக்கலாம். எங்கிருந்தும் படிக்கலாம். தேவை
இணைய இணைப்பு மட்டும் தான்.

இவ்வகையில் தமிழில் பல இணைய நூலகங்கள் உள்ளன. அவற்றின் செயல்பாடுகள், அவற்றில்
பயன்பெறும் நிலை குறித்து இக்கட்டுரை சில செய்திகளை எடுத்துரைக்கிறது.

இணைய நூலகம்

தமிழ்ப் புத்தகங்களைப் பார்வையிட தமிழ்ப் புத்தகங்களைப் படிக்க இலவசமாகப் பல
இணைய நூலகச் சேவைகள் உள்ளன. மதுரைத் திட்டம், தமிழ் இணையப் பல்கலைக் கழக இணைய
நூலகம், சென்னை நூலகம் இவ்வகையில் குறிப்பிடத்தக்க தமிழ் இணைய நூலகங்கள் ஆகும்.

இவற்றில் இருந்து பழைய தமி¢ழ் நூல்கள் முதல் இன்றை நூல்கள் வரை பெற முடிகின்றது.

மதுரைத் திட்டம்

இதன் இணைய முகவரி http://tamil.net/projectmadurai/ என்பதாகும். இதன் தலைவர்
எஸ். கல்யாணசுந்தரம். இவர் இந்தத் திட்டத்தை ஒரு கூட்டுமுயற்சியாகச்
செய்துவருகிறார். பண நோக்கம் இல்லாமல் தமிழ் நூல்கள் உலகத் தமிழர்களுக்கான
சொத்துக்கள் என்ற நிலையில் இவரின் ஒருங்கிணைப்புப் பணி நடைபெற்று வருகிறது.
இந்தத் தளத்தின் வழியாக ஏறக்குறைய தமிழின் பழைய நூல்கள் அனைத்தையும்
பெற்றுவிடமுடியும். இவை ஒருங்குறி (Unicode) எழுத்துருவிலும் கிடைப்பதால்
பார்வையிடத் தற்போது எளிதாகிவிட்டது. இருப்பினும் இவற்றில் தமிழ் நூல்களின்
மூலப்பகுதிகள் மட்டுமே கிடைக்கின்றன.

மேலும் தேடுதல் வசதி என்பது இதனுள் தரப்படுவதில்லை. இதனால் சொல், தொடர்
தேடுவதில் சிக்கல் உள்ளது. முழுவதுமாக நூலைப் படிக்க முடியும் என்பதைத் தவிர
இதனுள் வேறு சிறப்பு இல்லை.

இதன்மூலமாக தமிழ் இலக்கியம் அடுத்த கட்ட வளர்ச்சியை அடுத்த கட்ட பதிவை நோக்கிச்
சென்று கொண்டிருக்கிறது என்று மகிழ்ச்சி அடையலாம்.

இந்தத் திட்டத்தில் எல்லோரும் பங்கு பெற்றுச் செயலாற்ற முடியும் என்பது இதன்
மற்றொரு பெருமை. அதாவது தமிழ் தட்டச்சு தெரிந்தவர்கள் ஏதேனும் புதிய நூல்களை
மதுரைத்திட்டத்திற்கு ஏற்ற வகையில் செய்து தந்தால் அதனை இவர்கள் ஏற்றுச்
சரிபார்த்து அதன்பின் இணையத்தில் இணைப்பார்கள் .இவ்வாறுதான் அனைத்து நூல்களும்
இணைய வயப் படுத்தப் பட்டுள்ளன.

இதனைப் பயன்படுத்த எவ்வித பணமும் செலுத்தத் தேவையி¢ல்லை. மேலும் எவ்வித
விண்ணப்பம், பதிவுமுறை எதுவும் தேவையில்லை என்பது மற்றொரு மகிழ்ச்சியான செய்தி.
இவற்றில் தேவையானவற்றை நாம் சேமித்துக் கொள்ளவும் வசதிகள் உண்டு. அவையும்
தடைபடுததப் படவி¢ல்லை என்பது கூடுதல் மகிழ்ச்சி தரும் செய்தி.

தமிழ் இணையப் பல்கலைக் கழக நூலகம்

இதன் முகவரி http://tamilvu.org/ என்பதாகும். இதனுள் நுழைந்து செல்ல
கட்டணம் இல்லை. ஆனால் சில தகவல்களை நிரப்ப வேண்டும். ஒரு விண்ணப்பப் படிவத்தை
நிரப்பிய பின் இந்த நூலகத்திற்குள் செல்ல இயலும். இந்த நூலகத்தில் அகராதிகள்,
தமிழ் இலக்கிய இலக்கணங்கள், கலைக் காட்சிகள் முதலானவை இடம் பெற்றுள்ளன.
குறிப்பாக தமிழ் நூல்கள் உரையுடன் வழங்கப் பெற்றுள்ளன. இதனால் ஓரளவிற்கு எளிதாக
நூல்களைப் புரிந்து கொள்ள இயலும்.

மேலும் இங்குச் சேமிக்கப் பெற்றுள்ள நூல்கள் தேடுதல் வசதிகளையும் பெற்றுள்ளன.
அதாவது ஒரு சொல்லைத் தேடலாம், ஒரு வகைமையைத் தேடலாம், ஒரு பூவைத் தேடலாம்.
இவ்வாறு தேடுதல் வசதிகள் இதில் உண்டு. இதனுள் தற்போது பழைய இலக்கியங்கள்
கிடைக்கின்றன. புதிய நூல்கள் சற்று குறைவு.

இது தமிழக அரசின் சார்பு நிறுவனமாகப் பணியாற்றி வருகிறது. இதில் படிக்கும்
மாணவர்களின் நலனுக்காக வழங்கப் பெற்ற இந்நூலகம் தற்போது தமிழ் மக்கள்
பார்வைக்கும் கிடைக்கின்றது.

சென்னை நூலகம்
இந்தத் தளத்தின் முகவரி http://chennai.com என்பதாகும். இதனுள் தற்கால
இலக்கிய நூல்கள் அதிக அளவில் கிடைக்கின்றன. மற்ற பழைய இலக்கியங்களும் உண்டு
என்றாலும்¢ இதனுள் புதிய நூல்கள் அதிகம். இதுவும் தேடுதல் வசதியற்ற புத்தகத்தை
அப்படியே இணையப் பக்கமாகத் தருகின்ற தளமாகும். இருந்தாலும் இதன் செயல்பாடும்
பாராட்டத்தக்கது. இதற்குள் நுழைய எவ்விதக் கட்டணமும் எவ்விதப் பதிவும்
தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவை போன்ற பல இணையத் தமி¢ழ் நூலகங்கள் தற்போது இணையத்தில் இடம் பெற்று
வருகின்றன. இவற்றைப் பயன்படுத்தித் தமிழ் உலகம் தாய்மொழித் தமிழின் பெருமையைத்
தானும் அறிந்து கொள்ளலாம். உலகத்திற்கும் அறிவிக்கலாம்.
இந்த இணைய நூலகங்கள் தவிர பல குறிப்பிட்ட இடத்தில் இருக்கும் நூலகங்களும்
இணையச் சேவையில் கலந்து கொள்கின்றன. குறிப்பிட்ட இடத்தில் இருக்கும் ஒரு
நூலகம்¢ தன்னைப் பற்றிய தகவல்களை இணையத்தில் அளிப்பதோடு தன்னுள் இருக்கும்
புத்தகங்கள் பற்றிய விவரங்களை இணையத்தில் அளித்திருக்கும். இதனுள் புகுந்து
நாம் புத்தகத் தலைப்புகளைத் தேடி, அதன் எண்களைத் தேடி எடுத்துக் கொண்டு அந்த
குறிப்பிட்ட நூலகத்திற்குச் சென்றால் அந்த நூலைப் பெற வாய்ப்பாக இருக்கும்.
இதன்மூலம் தேடுதல் வேலையை நாம் எளிமையாக்கிக் கொள்ள முடியும். இவ்வகையில்
சென்னையில் உள்ள ரோஜா முத்தையா நூலகம் ஒரு இணையதளத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன்
முகவரி http://lib.uchicago.edu/e/su/southasia/about-rmrl.html .

இவ்வாறு தமிழ் இணைய நூலகம் பரவலாக அனைவராலும் அறியப்பட்டு வருகின்றது. இதனை¢
பயன்படுத்தி¢ நாமும் பயன்கொள்ளுவோம்.

நன்றி: அன்புடன் குழுமம்

சபாஷ்.... சரியான போட்டி..

சபாஷ்.... சரியான போட்டி..........

தனியார் விமான போக்குவரத்து நிறுவனங்களுக்கு நடுவில் நடந்த விளம்பர சண்டை... (மும்பை நகரில் நடந்ததாக இ-மைலில் வந்தது)









ஒரு 2 நாட்கள் கழித்து....








அதற்குப்பின்.....


சிறுவர்களுக்கான கல்வி

சிறுவர்களுக்கான கல்வி சார்ந்த கணனி விளையாட்டுக்கள்

Posted by admin 26 August, 2008

சிறுவர்களுக்கான கல்வி சார்ந்த கணனி விளையாட்டுக்கள் இலவசமாக பெற

மேலும் அறிந்து கொள்ள இங்கே செல்லுங்கள் http://gcompris.net/-On-one-page-translate-me-

தரவிறக்கம் 92mb (108 விளையாட்டுக்களில் 46 விளையாட்டுக்களை இலவசமாக பெற)

மேலும் சில விளையாட்டுக்கள் flash இல் இங்கே படத்தின் மேல் அழுத்தவும்

Special Children Games










முத்தம்

முத்தம் சில்லென்று சில குறிப்புகள்

Posted by HS 12 September, 2008

* ஒரு முறை முத்தமிடுவதால் நம் முகத்தின் 29 தசைகள் இயங்க வைக்கப்படுகிறது

*எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக முத்தமிடுகிறோமோ அதற்கு சமமாக முதுமையால் நமது முகத்தில் சுருக்கம் விழுவது குறையும் .

*காதலர்கள் இதழோடு இதழினைத்து முத்தமிடுகையில் பரிமாறிகொள்ளும் எச்சிலில் பல முக்கியமான கொழுப்பு , சில ஊட்டச்சத்துக்கள் , புரதம் என பல வித விடயங்களும் இருப்பதால் , அது முத்தமிடுபவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது .

*66% பேர் முத்தமிடுகையில் முகத்தை மூடிக்கொள்கின்றனர் , மீதி பேர் மட்டுமே கண்களை திறந்த படி தனது பார்ட்னரை பார்த்த படி முத்தமிடுகின்றனர் .

*அமெரிக்க பெண்கள் தனது திருமணத்திற்கு முன் குறைந்தது 80 ஆண்களையாவது முத்தமிடுகின்றனர் என ஒரு ஆய்வு கூறுகிறது .

*உலகில் ஒரு மனிதன் தனது வாழ்நாளின் இருபதாயிரத்து நூற்றி அறுபது நிமிடங்கள் அதாவது இரண்டு வாரங்கள் முத்தமிடுவதில் கழிக்கிறான். *நம் உதடுகளின் SENSITIVITYயானது நம் விரல்களை விட 200 மடங்கு அதிகமானது .

*இந்தியாவில் காதல் திருமணம் செய்து கொண்டவர்களை விட வீட்டில் பார்த்து முடிக்கப்படும் திருமணம் செய்து கொண்டவர்கள் அதிகம் முத்தமிட்டு கொளவதாக ஒரு கருத்துக்கணிப்பு கூறுகிறது .

*ஒரு முறை முத்தமிடுவதால் , 2-3 கலோரிகள் நம் உடலில் எரிக்கப்படுகிறது , அதுவே பிரெஞ்சு முத்தமாக இருக்கும் பட்சத்தில் 5 கலோரி அளவுக்கு சக்தி எரிக்கப்படுகிறது.

*வேலைக்கு செல்வதற்கு முன் தன் மனைவியை முத்தமிட்டு செல்பவர்கள் , அப்படி செய்யாதவர்களை விட 5 ஆண்டுகள் கூடுதலாக தனது தொழிலை மேற்கொள்கின்றனர்.

*மிக அதிக உணர்ச்சியுடன் 90 விநாடிகள் வரை முத்தமிட்டு கொள்பவர்களின் இதய துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் மிக அதிக அளவிற்கு செல்வதால் அவர்களது வாழ்நாளில் ஒரு நிமிடம் குறைகிறது.

*எஸ்கிமோக்கள் மற்றும் மலேசியர்கள் தங்களது மூக்கால் முத்தமிட்டு கொள்கின்றனர் .

*முத்தமிடுதல் பெண்களின் மன அழுத்தத்தை பெருமளவில் குறைக்கிறது. , ஆண்களுக்கு மனஅழுத்தத்தை அதிகமாக்குகிறது.

*குண்டாயிருப்பவர்கள் தொடர்ந்து ஒரு நிமிடம் வரை முத்தமிடுவதால் தனது உடலின் 26 கலோரிகளை குறைக்க இயலும் . இதனால் தொப்பை குறைகிறதாம்.

*முத்தமிடுதல் மற்றும் முத்தம் குறித்த ஆராய்ச்சிக்கு PHILEMOTOLOGY என்று பெயர் .

*5 மில்லியன் பாக்டீரியாக்கள் முத்தமிடுகையில் பரிமாறப்படுகிறது.

*ORBICULARIS ORIS எனபதே முத்த தசை ஆகும்.

*முத்தமிடுகையில் பெரும்பாலும் நாம் வலது புறமாகவே முத்தமிடுகிறோம் , ஏன் எனில் நமது மூளையில் நமது உணர்ச்சிகள் வலது பக்கமே கட்டுப்படுத்தப்படுகிறது.

*சினிமாவில் வெளியான முதல் முத்தகாட்சி 1896ல் வெளியான THE KISS திரைப்படத்தில் JOHN.C.RICE எனும் நடிகர் MAY IRWIN எனும் நடிகைக்கு கொடுத்ததேயாகும்.

*கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட்ட மிக நீளமான முத்தம் 417 மணிநேரமாம்.

*இரவில் நாம் முத்தமிட நமது மூளையில் சில சிறப்பு நியுரான்கள் இருப்பாதலேயே நம்மால் இருட்டிலும் சரியாக முத்தமிட முடிகிறதாம்.

*முத்தமிடுவதால் எய்ட்ஸ் பரவுவதில்லை

*இங்கிலாந்தில் மட்டுமே ஜீலை 6 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் தேசிய முத்த தினமாக கொண்டாடப்படடது .

*அத்தினமே பிற்காலத்தில் உலக முத்ததினமாக மாறியது

* முத்தம் குறித்த ஒரு பழமொழி - அணைப்பில்லா முத்தம் மணமில்லா பூ போன்றது.

நன்றி

http://athisha.blogspot.com/2008/08/blog-post_7616.html

சிறுவர்களுக்கான வரைதல் மென்பொருள்

சிறுவர்களுக்கான வரைதல் மென்பொருள் இலவசம்

Posted by HS 18 September, 2008

பல தூரிகைகளை கொண்ட இலகுவாக சிறுவர்கள் கணனியில் வரைந்து பழக அருமையான மென்பொருள்
Portable Cool Paint 2.6.0.1
Everyone can be Van Gogh with Cool Paint
Cool Paint is a painting software for drawing and image editing with more than 40 realistic painting tools and a vast picture gallery containing 1,000 pictures.

> It has four advantages:
> Simple, easy-to-use interface
> 40 painting tools
> 1000 picture materials
> Powerful and easy picture editing tools

It provides various paint brushes such as pencil, airbrush, watercolor brush, mark pen, crayon, pigment tube. In addition, you can create special effects on your images and photos with many fantastic painting tools including fairy pocket, geometrical shapes, color fill, filter, magic bar.
This painting software gives you the power to easily edit pictures with professional image processing techniques such as color adjustment, layer modification, darkroom processing. It supports all typical graphic formats including GIF, JPG, JPEG, PCX, PNG, PSD, TIF, FLY, TGA, etc.
Key features of Cool Paint are described as follows:
>> 40 powerful painting tools. Cool Paint provides various paint brushes such as pencil, airbrush, watercolor brush, mark pen, crayon, and pigment tube. In addition, you can create special effects on your images and photos with many fantastic painting tools including fairy pocket, geometrical shapes, color fill, filter, and magic bar.
>> Picture gallery containing 1,000 pictures. The vast picture gallery includes approximately 1,000 pictures with background, role and animation three categories. Besides the above three categories, Cool Paint’s “Fairy pocket” is specially designed for children and youth. Users can select animals, plants, cartoon characters and many other static and dynamic pictures in it.
>> Professional image editing tools. In addition to those painting tools, Users can easily edit their pictures with professional processing techniques such as color adjustment, layer modification, darkroom processing. Especially, the darkroom processing includes color balance adjustment, transparency adjustment, color enhancement adjustment and etc. It supports all typical graphic formats including GIF, JPG, JPEG, PCX, PNG, PSD, TIF, FLY, TGA, etc.
>> Simple and easy-to-use interface. Cool Paint has a simple, easy-to-use interface, fun sound effects, and cartoon buttons which facilitate easily using the program.
Operating System:
Windows 98/Windows ME/Windows 2000/Windows XP/Windows Vista,
DirectX 9.0 or higher.
Lowest hardware requirements:
CPU MMX 133 MHz
Video Card 8M, 800X600 Pixel, 16 Bit Color
Memory 32M
Hard Disk More than 400M Space
CDROM 4X CD-Rom
Others Keyboard, Mouse, Sound Card, Speakers
Download from rapidshare.com

மில்லியன் வருடம் உழைத்தால் நான் பில் கேட்ஸ்

மில்லியன் வருடம் உழைத்தால் நான் பில் கேட்ஸ் ஆகலாமாம் :-( !!!



உங்கள் மாத வருமானத்தையும் உங்கள் வார உழைக்கும் நேரத்தையும் சொன்னால் ,நீங்கள் பில் கேட்ஸ் ஆவதற்கு எவ்வளவு நேரம் உழைக்க வேண்டும் என்று சொல்கிறது இந்த வலை தளம் ...
http://www.disposableincome.net/

நான் ரசித்த படங்கள் - 1

அறிமுகம்

அனைவருக்கும் வணக்கம். முதலில் என் பிளாகுகும் ஒரு விசிட் அடிச்சுதான் பார்க்கலாம் என்று நினைத்த உங்களுக்கு நன்றி.1986 ஆண்டு JULY மாதம் 21 தேதி பிறந்து வளர்ந்து ஆளாகி நல்ல குப்பைகளை கொட்டிக்கொண்டிருந்த நான் ஆட்டைக்கடிச்சு கோழியைக்கடிச்சு கடசில பிளாக்கையும் கடித்துத்தான் பார்க்கலாம் என பண்ணிய ஒரு ட்ரை தான் இது. யாவரினதும் ஆதரவும் ( அல்லது ஏதோ ஒன்று !!! ) கிடைக்கும் என நம்பி எனது சேவையை ( ஹிஹி ) இங்கும் விஸ்தரிக்கின்றேன்.

RAJINI ENTHIRAN STORY


ரோபோ கதை இதுதான் - நம்புங்கோ !


ரோபோ படத்தின் என்ன என ஆளாளுக்கு கிளி ஜோசியம் கூறி வருகின்ற நிலையில், இயந்திரன் படத்தின் உண்மையான கதை என்ன ? ஷங்கரின் மனதில் இயந்திரன் படக்கரு தோன்றியது எப்படி ? இதை இந்த பதிவின் இறுதியில் பார்க்கலாம் !
ஐசக் அசிமோவ் என்ற பிரபல (நம்மூர் சுஜாதா போல) அறிவியல் விஞ்ஞான புனைகதை எழுத்தாளர் 'I, Robot' என்ற பெயரில் ஒரு நாவல் எழுதினார். பல நாவல்கள் எழுதியிருந்தாலும் ஐசக் அசிமோவ் பிரபலமானது இந்த நாவல் மூலம்தான்.
'I, Robot' நாவலின் கதை 2035 ம் வருடங்களில் மனிதனின் தேவைகளை பூர்த்தி செய்யும் பணியில் ரோபோ எனப்படும் இயந்திர மனிதனின் பங்கு பெருமளவில் இருக்கும் என்பதைப்பற்றியது. அப்படிப்பட்ட சூழலில் மனிதனுக்கு இயந்திர மனிதனின் பங்கு என்ன என்பது பற்றி ஆராய்ந்து வரும் ஒரு இயந்திர உளவியலாளர் (Robo Psychologist) திடீரென தற்கொலை செய்து கொண்டு இறந்து விடுகிறார். இது பற்றி விசாரணை மேற்கொள்ளும் காவல் துறை அவரது தற்கொலையில் மர்மம் இருப்பதாக சந்தேகப்படுகிறது. மேல் விசாரணைக்கு நியமிக்கப்படும் காவல் அதிகாரி விஞ்ஞானியின் மரணம் தற்கொலை அல்ல என்று கண்டறிகிறார். விஞ்ஞானி கொலைக்கான காரணம் பற்றி ஆராயும் போது அவருக்கு, விஞ்ஞானியால் உருவாக்கப்பட்டு, உளவியல் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு வரும் நூற்றுக்கணக்கான ரோபோக்கள் மீது சந்தேகம் வருகிறது. இறுதியில் விஞ்ஞானி ரோபோக்களால் கொலை செய்யப்பட்டிருப்பதையும், சிந்திக்கும் திறன் பெற்ற ரோபோக்கள் மனித குலத்திற்கு எதிராக ஒன்று சேர்ந்து மனிதர்களை அடிமைகளாக்கும் முயற்சியில் ஈடுபடுவதையும் கண்டறிந்து அந்த சதித்திட்டத்தை முறியடிக்கிறார்.
ஐசக் அசிமோவ் எழுதிய இந்த கதையை பிரபல ஆங்கில படத்தயாரிப்பு நிறுவனமான Twentieth Century Fox நிறுவனம் 2004 ம் ஆண்டு தயாரித்து வெளியிட்டது. இப்படத்தில் ஜேம்ஸ் குரோம்வெல் விஞ்ஞானியாகவும், வில் ஸ்மித் துப்பறியும் காவல் அதிகாரியாகவும், ப்ரிட்கேட் மொய்னயன் துணை பெண் காவல் அதிகாரியாகவும் நடித்துள்ளனர். அலெக்ஸ் ப்றேயாஸ் இயக்கிய இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதோடு ஆஸ்கார் விருதுக்கும் பரிந்துரை செய்யப்பட்டது.
சரி, நம்மூர் கதைக்கு வருவோம் ! ரோபோ பட கரு பற்றிய எண்ணம் ஷங்கருக்குள் புகுந்தது எழுத்தாளர் சுஜாதா முலமாக. அந்நியன் படத்திற்காக சுஜாதாவுடன் பணியாற்றிய போது, அந்நியன் போல எதிகாலத்தில் மனிதர்களுக்கு எதிரிகளாக yaar யாரெல்லாம் இருப்பார்கள் எனபது பற்றிய பேச்சு ஷங்கருக்கும் சுஜாதாவிற்கும் இடையே நடந்தது. அப்போதுதான் சுஜாதா ஐசக் அசிமோவ் எழுதிய 'I, Robot' நாவல் பற்றி கூறியிருக்கிறார். அதில் ஆர்வமான ஷங்கர் அந்த நாவலை வாங்கி படிக்க ஆரம்பித்த போதே அவருக்குள் ரோபோ படத்திற்கான முதல் விதை விழுந்தது. அதன் பிறகு வில் ஸ்மித் நடித்த 'I, Robot' படத்தையும் திரும்ப திரும்ப பார்த்துள்ளார். (ஷங்கரின் இணையதளமான http://www.directorshankar.com/- இன் வரவேற்பு பக்கத்தின் முகப்பு 20th Century Fox நிறுவனத்தின் லோகோவை போலவே அனிமேஷன் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது)
பிறகு, அஜித் அல்லது கமலை நடிக்க வைக்கலாம் என திட்டமிட்ட ஷங்கர், சிவாஜியின் வெற்றிக்குப்பிறகு, சுல்தான் த வாரியர் என்ற படத்தில் ரஜினி ஆர்வம் காட்டியதும், ரோபோ கதையை அவரிடம் கூறி இதுவும் பாண்டஸி டைப் கதைதான், என்று கூறி சம்மதம் ரஜினியிடம் சம்மதம் பெற்றார். அதன் பிறகு ரஜினிக்கேற்றபடி கதையில் மாற்றங்களை செய்து, 'I, Robot' படத்தை தமிழ் உலகிற்கு ஏற்றபடியும் ரஜினிக்கு ஏற்றபடியும் மாற்றி திரைக்கதை உருவாக்கியுள்ளார் ஷங்கர்.
இந்த படத்தில் ரஜினி துப்பறியும் காவல் அதிகாரியாகவும், ஐஸ்வர்யா பச்சன் துணை பெண் காவல் அதிகாரியாகவும் நடிக்கிறார்கள். ஷங்கரின் இயக்கத்தில் வெளிவரும் பத்தாவது படமான 'இயந்திரன்' சிறுவர்களை கவரும் விதத்தில் கிராபிக்ஸ் வித்தைகளுடன் ரஜினி ரசிகர்களுக்கு விருந்தாகவும், கதைக்கரு மற்றும் தொழில் நுட்பம் சார்ந்த விஷயங்களில் தமிழ் சினிமாவை வேறொரு தளத்திற்கு இட்டுச்செல்லும் என்பதில் சந்தேகமில்லை.
'I, Robot' படத்தின் சில முக்கிய காட்சிகள் உங்களுக்காக ! மேலும் பார்க்க... www.youtube.com போங்க.உண்மையில் 'I, Robot' ஒரு சிறப்பான படம், முடிஞ்சா பாத்துட்டு உங்க கருத்த சொல்லுங்க.